Type Here to Get Search Results !

Xiaomi Mi 11 Pro பற்றிய முக்கியமான செய்திகள் வெளியானது

Xiaomi நிறுவனம் சமீபத்தில் சீனாவிலிருந்து Mi 11 சாதனத்தை ஸ்னாப்டிராகன் 888 ப்ராசெஸ்சார் உடனான முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. இந்த சாதனத்தில் அடுத்த தலைமுறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. 



தப்போது நிறுவனம் விரைவில் Mi 11 Proவை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. வெய்போவில் (Weibo) வெளியிடப்பட்ட Mi 11 Proவின் படங்களை அடிப்படையாகக் கொண்ட சீன போர்ட்டலின் அறிக்கையானது. Pro வேர்சன் ப்ளூ மற்றும் சில்வர் கலர் வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறுகிறது.



ஆனால் Mi 11 ஃபிளாக்ஷிப்பின் பாலோ-அப் வேர்சனாக (follow-up version) இருந்தாலும், Pro ஸ்மார்ட்போன் அதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், குறிப்பாக கேமராவில் மாற்றங்கள் இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அறிக்கையின்படி, Mi 11 Pro அட்டகாசமான பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், இதில் பெரிஸ்கோப் லென்ஸும் (Periscope lens) அடங்கும் என்று  கூறப்படுகிறது. சாதனம் பற்றி லீக்கான ரெண்டர்களில் 120x zoom அம்சமும் உள்ளது. இதில் 4 கேமராக்கள் இருக்கும், அல்ட்ராவைடு லென்ஸில் 35 மிமீ சமமான போக்கல் லேன்த் 12 மிமீ இருக்கும் என அறிக்கை கூறுகிறது.



மறுபுறம், பெரிஸ்கோப் லென்ஸ் 120 மி.மீ ஆக உள்ளது. மூன்றாவது லென்ஸ் Mi 11ல் காணப்பட்ட 108 MP சென்சார் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக, நான்காவது கேமரா மென்மையான பெரிதாக்குதலுக்கான 2x அல்லது 3x டெலியாக இருக்கலாம். (2x or 3x tele for smoother zooming action). இருப்பினும், முன்புறம் கேமராவின் இருப்பிடத்துடன் Mi 11 Pro இன் தோற்றமும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 11 ஐப் போலவே இருக்கும். 4,600 mAh பேட்டரி மூலமாக, Mi 11 6.81 அங்குல AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே பேனல் (AMOLED quad curved DotDisplay panel) மற்றும் WQHD + 3200 × 1440 ரெசொலூஷனை கொண்டிருக்கிறது.


1,500 நீட்ஸ் உடன் சூப்பரான பிரைட்னெஸ்ஸை போன் வழங்குகிறது, Mi 11 120 ஹெர்ட்ஸ் ரீபிரெஷ் வீதத்தையும் 480 ஹெர்ட்ஸ் டச் மாடல் விகிதத்தையும் சப்போர்ட் செய்கிறது. 1 / 1.33 அங்குல பெரிய இமேஜ் சென்சார் கொண்ட முதன்மை 108 MP 8K கேமராவைத் தவிர, பின்புறம்  கேமரா அமைப்பு 123 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 50 மிமீ டெலிஃபோட்டோ மேக்ரோ லென்ஸ்களை கொண்டிருக்கிறது. இது மிட்நைட் கிரே, ஹாரிசன் ப்ளூ, ஃப்ரோஸ்ட் ஒயிட், லிலாக் பர்பில் மற்றும் ஹனி பீஜ் (Midnight Gray, Horizon Blue, Frost White, Lilac Purple and Honey Beige) வகைகளில் கிடைத்துள்ளது.

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies