Type Here to Get Search Results !

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதா?- உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

Top Post Ad

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி, சசிகலா காலில் விழுந்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.


தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசும் பேச்சுகள் குறித்து அவ்வப்போது விமர்சனம் எழுந்ததுண்டு. இளம் தலைவராக உருவெடுத்துள்ள உதயநிதி, எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் குறித்து விமர்சித்துவிட்டு பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை எனப் பின்வாங்கினார்.

சமீபகாலமாக பிரச்சாரம் செய்துவரும் உதயநிதி, முதல்வர் பழனிசாமியை விமர்சனம் என்கிற பெயரில் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றதைப் பற்றிப் பேசுவதைப் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இதே தொனியில் முதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று பேசினார்.

அப்போது அவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து பலரும் விமர்சித்துவரும் வேளையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.


அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்திப் பேசிய கருணாநிதியின் பேரன் என்பதை ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி.


பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது”. இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் டுவிட்டர் பதிவில்;- சசிகலா அவர்கள் குறித்து  உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு  மிகவும் ஆபாசமானது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒரு  பெண்மணியை கேவலமாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது  உரிய நடவடிக்கை எடுத்து, தண்டனையை பெற்று தர வேண்டியது தமிழக அரசின் கடமை. 


முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரன், முதல்வராக துடிக்கும் ஸ்டாலின் அவர்களின் மகன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இப்படி பேசியிருப்பது தமிழத்திற்கே மிக பெரும் அவமானம். தி மு கவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள்  இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். மு க ஸ்டாலின் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தி மு க கூட்டணி கட்சியினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.



இதுகுறித்து தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பதிவில்;- இன்று அவர் தாத்தா டி.என் அனந்தநாயகயிலிருந்து ஆரம்பித்து வைத்ததை பேரன் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கொண்டுள்ளார். அறிவாலயம் சிந்திக்கின்ற பாரம்பரியமே பெண்களை கேவலப்படுத்துவதாக உள்ளது. 


தலைவர்கள் இதுபோன்ற பேச்சுக்களை முன்னெடுக்கும் போது, தொண்டர்கள் பூங்கோதையை அவமானப்படுத்துவதில் துவங்கி சக பெண் நிர்வாகிகளின் இடுப்பைக் கிள்ளுவது வரை சாதாரணமாக கடந்து போகிறார்கள். எதிர்வினையாக ராசாத்தி அம்மாள் துவங்கி கனிமொழி கிருத்திகா வரை பெண்களே இலக்காகுகிறார்கள். 


பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் இம்மாதிரியான விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள். தன் அம்மா வயதிலிருக்கும் சசிகலாவை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்கின்ற விதம் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியது. இதை மு.க.ஸ்டாலின் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. துர்கா ஸ்டாலின் அவர்களே! செய்வீர்களா! என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன். 



உதயநிதி ஸ்டாலினின் உற்சாகமான சர்ச்சைக்குரிய பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை சர்ச்சைக்குரிய விதத்தில் கூறி பேசிய கருத்துக்கள் அதிமுகவினரினடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.