சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை அவசியமானது என்று பாஜகவின் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.
இந்தநிலையில், சசிகலாவின் வருகை பலருக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா வருகை அதிமுகவுக்கு பலம் என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள பாஜக நிலையில், சசிகலா–அதிமுகவை இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஹெச்.ராஜா, “சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை அவசியமானது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து யாரும் செல்லவில்லை.
சசிகலாவை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. மார்ச் 15இல் தமிழகத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும்” என்றார்.

