கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பத்தனம்திட்டா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, கனமழை எச்சரிக்கை 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருக்கிறது.
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றது. குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்ச்சியாக கொட்டி வருகிறது.
இதன் காரணமாக, பத்தனம்திட்டா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, திருவனந்தபுரம் மக்கள் யாரும் அத்தியாவசியமின்றி பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று அந்த மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்தனம்திட்டா பகுதியில் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காற்று 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாக்குளம் மற்றும் திரிச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, திருவனந்தபுரத்தின் பொன்முடி மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உள்பட பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட நிலையில் அவசரநிலை கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ள அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் வழியாகவோ தொடர்புக்கொள்ளலாம். உதவி எண்கள், 8606883111, 9562103902, 9447108954, 9400006700 ஆகும். இதேபோல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.