அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலில் குளறுபடி: முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு!!
![]() |
அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில் |
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காட்டேரி பஞ்சாயத்திற்குட்பட்ட அனுமந்தீர்த்தம் பகுதில் உள்ள இந்து அறநிலைத்துறை சொந்தமான ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. அக்கோவிலில் நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக முருகன் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு கொடுத்துள்ளார்.
![]() |
முருகன் |
அந்த மனுவில் முருகன் கூறியிருப்பதாவது; அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலில் அதே பகுதியை சார்ந்த கே.குமரன் என்பவர் டிக்கெட் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கே.குமரனின் மனைவி அழகு புனிதா என்பவர் அன்னதான திட்டத்தில் சமையளராக பணிபுரிந்து வருகிறார்.
கே.குமரனின் செல்வாக்கால், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் நிர்வாகத்தில், பகுதிநேர எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார்.
![]() |
அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில் |
ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சொந்தமான பூஜை பொருட்கள் விற்கும் கடையையும் இவர்களே எடுத்து நடத்துகிறார்கள். மற்றவர்கள் பூஜை பொருட்கள் விற்கும் கடையை, குத்தைகைக்கு எடுக்கப் போனால் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள். ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களையும் மற்ற ஊழியர்களையும் மிரட்டி அடக்கி வைத்துள்ளார்கள்.
இந்த அராஜக போக்கு, சுமார் 20 வருட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு தடையாகவும் கே.குமரனின் குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் செயல்படுகிற கே.குமரனின் மாமனார் அதாவது, அதிமுகவின் கிளை கழக செயலாளர் வே.இராஜேந்திரன் ஒரு ரவுடிபோல் தன்னை பாவித்துக்கொண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் நிர்வாகத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். தான் ஒரு அரசியல்வாதி என்பதால், யாரையும் கோவில் நிர்வாகத்திற்குள் விடாமல் பாதுகாத்து வருகிறார் வே.இராஜேந்திரன்.
ஆகவே, இவர்கள் வேறு கோவிலுக்கு பணிமாற்றம் செய்து யாருடைய இடையூறும் இல்லாமல் நிர்வாகம் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யுமாறு அறநிலைத்துறைக்கு கேட்டுக்கொள்கிறேன்.
![]() |
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு |
மேலும் இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது; கே.குமரனின் குடும்பத்தை சார்ந்தவர்கள் கோவில் நிர்வாகத்தில் பணியாற்றி வருகிறார்கள். அங்கே பக்தர்களிடம் குளிப்பதற்கு 10 ரூபாயும், ஆடை மாற்றுவதற்கு 10 ரூபாயும், பெற்று வருவதாகவும் மேலும் அங்கே வரும் வாகனங்களுக்கும் வசூல் செய்வதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.
![]() |
1 |
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், இந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]() |
2 |