சசிகலா அதிமுக கட்சியில் இல்லாதபோது, அதிமுகவின் கொடியை பயன்படுத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று கே.பி.முனுசாமி பேட்டி கொடுத்திருந்தார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி, சசிகலா அதிமுக கட்சியில் இல்லாதபோது, அதிமுகவின் கொடியை பயன்படுத்தியது கடும் கண்டனத்திற்குரியது. அமமுகவை அதிமுகவோடு இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் டிடிவி.தினகரன் அதிமுகவிற்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு, மன்னிப்பு கடிதம் கொடுத்தால், தன்னை அதிமுகவில் இணைக்க கோரிக்கை விடுத்தால், அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை அதிமுக தலைமை செய்யும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சி பேசிய டிடிவி.தினகரன், யார் தவறு செய்தவர்கள்... யார் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள்... யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள்... என்பதையெல்லாம் கட்சித் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் முடிவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம், காலம் பதில் சொல்லும். தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றத்தை உருவாக்க சசிகலா வருவார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா. அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்டவும், தேர்தல்களை நடத்துவதற்கும், ஒருவருக்குப் பதவி கொடுப்பதற்கும், நீக்குவதற்கும் அதிகாரம் படைத்தவர் பொதுச் செயலாளர் என்பவர்.
ஆகையினால், சசிகலா அதிமுகவையும், அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமையும் உண்டு எனக் கூறினார். இதனால் அதிமுகவின் மேலிடத்தில் கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டது
அதிமுகவில் அதிகாரம் படைத்தவர் பொதுச் செயலாளர் சசிகலா: அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமையும் உண்டு


