மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த விவசாயிகளின் போராட்டம், ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவத்தால் போராட்டம் திசை மாறியது.
இந்தநிலையில், போராட்டத்தில் இருந்து பாரதிய கிசான் சங்கம் வெளியேறியது. இருந்தாலும், விவசாயிகள் போராட்டத்தை கைவிடமல், டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லை பகுதிகளில் குவிந்துள்ளார்கள்.
புறத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், டெல்லி போலீஸ் பலமான தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர்.
அண்டை நாடுகளுக்கும் நமக்கும் இடையே எல்லைவேலிகள் அமைக்கப்படுவதை போல், தற்போது,டெல்லியில் தற்காலிகமாக கான்கிரீட் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சிறிய நுழைவு கிடைத்தால் கூட விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து விடும் அளவிற்கு போராட்டம் வலுத்திருக்கிறது. இதையடுத்து, விவசாயிகளுக்கு ஆதரவாக காசிப்பூருக்கு சென்ற தமிழக எம்.பிக்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
காசிப்பூருக்கு பேருந்தில் தமிழக எம்.பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். ஆனால், தடுப்பு வேலிகள் போடப்பட்டதால் எம்.பி.க்கள் விவசாயிகளை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் டெல்லி போலீசார் சாலையில் பதித்து வைத்திருந்த ஆணிகளை விவசாயிகள் அகற்றுவதாக தகவல்கள் வெளியாகின்றன.


