கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் உள்பட 88 அரசு அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது.
அரசு பணிகளில் அதிகாரிகள் தினமும் சந்தித்து வரும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் தீர்வுகான அதிலியிருந்து இருந்து விடுபடவும், அதிகாரிகளின் உடல் திறன் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு, ஆண்டுதோறும் சர்வேத பயிற்சி மையங்களால் சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகின்றது. அந்த பயிற்சிகளில் ஈஷா அறக்கட்டளையின் ‘இன்னர் இன்ஜினியரிங் லீடர்ஷிப்’ பயிற்சியும் ஒன்று. அதற்காக இந்த 88 அதிகாரிகளுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
அளிக்கப்பட பயிற்சியில் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா எனும் சக்திவாய்ந்த் யோகா பயிற்சியும், உடல்,மனநலனை மேம்படுத்த எளிய யோகா பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 88 அதிகாரிகளும் ஈஷா சத்குருவுடன் கலந்துரையாடலும், தியானம் குறித்த நிகழ்வுகளிலும் பங்கேற்பும் நடந்துள்ளது.



