வரும் 8ஆம் தேதி முதல் கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவது வழக்கம். அது எதற்காக நடத்தப்படுகிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள கோவிகளில் இருக்கும் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த சில உளைச்சலைப் போக்கி, அவைகள் ஓய்வெடுக்கவும் லாடல் ஊக்கம் பெறவும், மருத்துவ பரிசோதனைகள் பெறவும் வாய்ப்பளிக்கும் விதமாக அமைக்கிறது. இந்தநிலையில், இந்த நிகழ்வை இந்து சமய அறநிலையத் துறை சார்பில், யானைகள் நல வாழ்வு முகாம் 2003-ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு, இதுவரை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் ஆரோக்கியம் கருதியும், யானைகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், யானைகளுக்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் இந்த சிறப்பு நலவாழ்வு முகாம் அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, வரும் 8ஆம் தேதி முதல் கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற இருக்கிறது. கோவையை அடுத்த, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்களுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. துவங்கியிருக்கும் இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க இருக்கின்றன.


