Type Here to Get Search Results !

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடங்களுகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் -கமல்ஹாசன் #Kamal_Haasan, #Tasmac_Stores, #Rehabilitation_Centers

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் உடனே மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.  தமிழக அரசுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடங்களுகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் -கமல்ஹாசன்



சென்னை,


இதையடுத்து, இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது:-


பொது இடங்களில் பட்டப்பகலில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால், கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலுவை படுகொலை செய்யப்பட்டியிருக்கிறார். 


டாஸ்மாக் கடைகளில் பட்டப்பகலில் குடித்துவிட்டு குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

மக்களை காக்கவேண்டிய அரசு, குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி, தமிழகத்தில் இன்று ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த பொறுப்பற்ற அரசு.


நாட்டில் சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. சாராயம் விற்பது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.


ஆனால், குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் திறந்தீர்களோ, அங்கெல்லாம் மக்களைக் காக்க மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று  தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies