தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேறவையில் ஆளுநர் உரையாற்ற தொடங்கியவுடன் ஆளுநர் உரையை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு, எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக அரசு, முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்தநிலையில்தான், ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணித்தோம். இந்தக் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

