மதுரையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் உட்பட 3-பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருந்துள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நேற்று காலை நடந்தது நடந்து வந்த நிலையில், இதில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது . இதில் பணியில் இருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்து தகவல் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய சந்திரன், ராமன் மற்றும் ஜெயராமன் ஆகிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதியே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 3-பேர் இறந்த விவகாரம் தொடர்பாக, கட்டிடத்தின் உரிமையாளர் வாசுதேவன், கட்டிட ஒப்பந்ததாரர்கள் கருப்பையா, அய்யனார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.




