வால்பாறை அக் 17.,
வால்பாறையில் இருந்து 30 பேருடன் பெங்களூர் சென்று கொண்டிருந்த சொகுசு வேன், 21வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சொகுசு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
கடந்த 4 நாட்களாக அரசு விடுமுறை என்பதால் வால்பாறை பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர். கூட்டம் அதிகமானதால், வால்பாறையில் போதுமான தங்குமிடங்கள் இல்லாமலும், முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் வாகனங்களிலேயே சுற்றுலா பயணிகள் தங்கியும் சாலையோரங்களில் உறங்கியும், தங்களது விடுமுறையை கழித்த நிலையில் பெங்களூரில் இருந்து வால்பாறைக்கு 30 பேருடன் சுற்றுலாப்பயணிகளுடன் சொகுசு வேனில் சுற்றுலா வந்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து நேற்று முன்தினம் வால்பாறையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி சுற்றுலா இடங்களுக்கு சென்றுவந்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை வால்பாறையில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது 40 கொண்டை ஊசி வளைவில், 21வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.
இந்த சொகுசு வேனில் பயணம் செய்த 30பேரில், 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 5 பேரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக 10 பேரை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அரசு ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காடம்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யது விசாரணை மேற்கொண்டனர்.
வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், புதிதாக மலைப்பாதையில் வாகன ஓட்டிவரும், வாகன ஓட்டிகளுக்கு மழைக்காலங்களில் வாகனங்கள் இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.