அஇஅதிமுக இன்று தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தநாளை தமிழ்நாடு முழுவதும் பொன்விழா ஆண்டாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு சென்ற வி.கே.சசிகலா அங்கு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
அந்த இடத்தில் அதிமுக கழக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா என்ற கல்வெட்டு பதிக்கப்பட்டு இருந்தது. அந்த கல்வெட்டில், கொடியேற்றியவர் 'வி.கே.சசிகலா கழக பொதுச் செயலாளர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மலர்தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.