சசிகலாவின் வருகை அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாகவே அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், விடுதலைக்கு பின்னரும் அங்கேயே சிகிச்சை பெற்று, பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று முன்தினம் அங்கிருந்து புறப்பட்டு அமமுக-அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் 23 மணி நேரம் பயணத்திற்கு பிறகு நேற்று காலை தமிழகம் வந்தடைந்தார்.
சசிகலா வருகையையொட்டி அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தகையை வரவேற்பை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். சிறப்பான பேண்டு வாத்தியம் முழங்க, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில், சுமார் 320 கிலோமீட்டருக்கு மக்கள் ஆரவாரத்தோடு வரவேற்க சென்னை வந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'சசிகலா வருகை அதிமுகவுக்கு பலம் சேர்க்கும். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய வரவேற்பை மிக பெரிய எழுச்சியாக கருதுகிறேன். இதுபோல் எழுச்சியை முன்பு எம்ஜிஆருக்கு தான் இதுபோன்ற வரவேற்பு இருந்ததை பார்த்திருக்கிறேன் என்றார்.


