தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களமே அனல் பறக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி, 7.5% இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு என அதிரடியாக களமிறங்கியிருக்கும் முதல்வர் பழனிசாமி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தனது ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகளையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார். இத்தகைய சூழலில் தான், சிறையில் இருந்து ரிலீஸ் ஆன சென்னைக்கு எண்ட்ரீ கொடுத்திருக்கிறார்.
சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், இரட்டை தலைமையிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதை அவரது காரில் அதிமுக கொடி பொறுத்தப்பட்டிருந்ததே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. சசிகலாவுடன் சேர்ந்து டிடிவி தினகரனும் அதிமுகவை மீட்டெடுத்தே தீருவோம் என சபதம் போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது சசிகலா, தினகரன் பற்றி மறைமுகமாக பேசினார். ஒரு போதும் அவர்களுக்கு அதிமுக தலை வணங்காது.
சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள். அடிமட்ட தொண்டர்கள் தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும் என்றும் முதல்வர் கூறினார்.


