Type Here to Get Search Results !

யானைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டாப்சிலிப் யானை பொங்கல் விழா #Tapsilip #ElephantPongalFestival

Top Post Ad

யானைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 
டாப்சிலிப் யானை பொங்கல் விழா



பொள்ளாச்சி, ஜன.16-

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.


வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பனிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில் யானைகளை குளிப்பாட்டி, பொட்டடு வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.மலைவாழ் மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்தனர்.

பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.



இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.



சுற்றுலா பயணிகள் கூறுகையில்...

இங்கு ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகளை பார்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது‌ என்றனர். நிகழ்ச்சியில் உதவி மணப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் புகழேந்தி, மணிகண்டன், சுந்தரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.



Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.