இடிந்து விழும் நிலையில் ஏரிப்பட்டி தபால் நிலையம் -எப்போ விழுமோ... அச்சத்தில் அலுவலர்கள்
டிச.26 ஏரிப்பட்டி ஊராட்சி இயங்கி வரும் கிளை தபால் நிலையம் மிகவும் மோசமான கட்டிடத்தில் இயங்கு வருவதால் எந்த நேரமும் இணைந்து கீழே விழக்கூடிய நிலைமையில் இருக்கிறது.
பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சியில் கிளை தபால் நிலையம் இயங்கி வருகிறது. கட்டிடத்தின் உள்ள மழை பெய்ததால் நீர் கசைவு ஏற்பட்டு வைக்கப்பட்டுள்ள தபால்கள் மற்றும் அலுவலக குறிப்பீடுகள் நனைந்து நாசமாகிறது. எந்தநேரத்திலும் கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதில், உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் அலுவலர்கள் பணிசெய்து வருகின்றனர்.
இதை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக புதிய கட்டிடத்தை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே ஏரிப்பட்டி வாழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இந்த கிளை தபால் நிலையம் இந்த கட்டிடத்தில் சுமார் 12 ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக அலுவலகத்தில் வைக்கப்படுகிற தபால்கள் மற்றும் அலுவலக குறிப்பீடுகள் அனைத்தும் மழை நீரினால் நனைகின்ற அவலத்தில் உள்ளது.