குழந்தைகள் தினவிழா: மாணவர்களுக்கு பசுமைக்காவலர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏரிப்பட்டியில் குழந்தைகள் தினவிழா மிகவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை பொறுப்பு திருமதி சுப்புலெட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். நெகமம் காவல்நிலைய காவலர்கள் திரு. சக்திவேல் மற்றும் முத்துகல்யாணி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தலைமைஆசிரியை சுப்புலட்சுமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி பொன்னாடை போர்த்தி ஒன்பதாம் வகுப்பு மாணவீ தனிக்சாபாரதி எழுதிய புத்தனின் தலையில் 108 நத்தைகள் நூல் வழங்கி சிறப்பு செய்தார்.
காவலர் முத்துகல்யாணி அவர்கள் Good touch and bad touch பற்றி குழந்தைகளிடம் கலந்துரையாடினார். பிறகு காவலர் சக்திவேல் அவர்கள் "சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வழிமுறைகள்" பற்றி விழிப்புணர்வு உரை வழங்கினார்.
பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் 2500 புங்கை விதைகள் சேகரித்தும், மற்றும் 250 புங்கன் நாற்றுகள் தயாரித்த 10 மாணவர்களுக்கு பசுமைக்காவலர் விருது மற்றும் சான்றிதழ்கள் காவலர்கள் கரங்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை மற்றும் தருமம் அறக்கட்டளை இணைந்து வழங்கி பசுமைக்காவலர் விருது கீழ்க்கண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
அகிலேஷ்,லோகேஷ், கார்த்தி,திவாகர், நந்தகுமார், தன்யா,கௌதம், விக்னேஷ்,சரண், பிருந்தா,கிருபாகரன், நிஷாந்த் மற்றும் தர்ஷினி ஆகியோர்க்கு பசுமைப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா பேசுகையில், விதைகள் தற்போது விழும் காலம் தொடங்கிவிட்டது. ஆகவே விதைகள் ஒவ்வொன்றையும் வீண் செய்யாமல் சேகரித்து வைக்க வழிமுறைகளை கூறினார். ஒவ்வொரு விதைகளும் எண்ணிலடங்கா முடிவிலி மரக்கன்றுகளை உருவாக்கும் திறன் உடையவை ஆகவே பொக்கிஷ விதைகளை சேகரிப்போம். விதைப்போம்.
மரங்களை நட்டு பசுமையைப் பரப்புவோம். எதிர்கால சந்ததியினர் வளமான நலமான வாழ்வு பெற சுத்தமான காற்று நீர் பூமியை விட்டுச்செல்வோம் என விழிப்புணர்வு உரையை கூறினார்.
ஆசிரியை திருமதீ ராணி அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் பென்சில் வழங்கினார்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 50. மாணவர்களுக்கு English dictionary ஆசிரியை சுசீலா பரிசாக வழங்கினார். மேலும் அன்றாட வாழ்வில் சரளமாக ஆங்கிலம் பேச மற்றும் எழுத குறிப்புகள் பயன்படுத்தும் விதம் பற்றி விளக்கினார்.
பள்ளிக்கல்விதுறை ஆணையின் படி குப்பாச்சிகலு சிறார் திரைப்படம் வெளியிடப்பட்டது. ஆசிரியை சாஜிதாபானு நேரு முகமூடியிட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து நேரு பாடல் மற்றும் ஓவிய திறமையை வெளிப்படுத்தினார்கள். ஆசிரியை சரண்மா விழா நெறியாள்கை செய்து லட்டு சாக்லேட் போன்ற இனிப்புகளை வழங்கி நன்றியுரை கூறி விழா இனிதே நடைபெற்றது.