ஆனைமலை அருகே சாலை விரிவாக்கத்திற்காக வேப்பமரத்தை வேருடன் அகற்றி மறு நடவு செய்த தன்னார்வ அமைப்பு
பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் கொச்சின் திருச்சூர் குருவாயூர் மீன்கரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலையின் இருபுறமும் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஆனைமலை அடுத்த குஞ்சுபாளையம் பிரிவு அருகே சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த எட்டு வயது உடைய வேப்ப மரத்தினை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அது குறித்து தகவல் அறிந்த மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பினர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மரத்தை வெட்டாமல் வேருடன் அகற்றி மறு நடவு செய்வதாக தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை துறையினர் அனுமதி அளித்த நிலையில் பொக்லைன் மற்றும் கிரேன் போன்ற ராட்சச இயந்திரங்களின் உதவியுடன் வேப்ப மரத்தை வேருடன் எடுத்து நெடுஞ்சலைக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் மிகப்பெரிய குழி பறித்து தென்னை நார் மற்றும் மண்புழு உரங்கள் கலந்து வேப்பமரம் மறுநடவு செய்யப்பட்டது.
தன்னார்வலர் மரம் மாசிலாமணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உசேன் முன் நின்று நடத்திய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்