வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வால்பாறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் அறிவுரையின்படி வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வால்பாறை ஸ்டென்மோரில் இருந்து தொடங்கிய பேரணி, வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் முடிவடைந்தது. இதில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ், என்சிசி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், காவலர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.