பொள்ளாச்சி காந்தி சிலைக்கு கதர் நூல் மாலை அணிவிப்பு
பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில் (01/11/2022) நேற்று பொள்ளாச்சி காந்தி சிலைக்கு கதர் நூல் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், தொழில் வர்த்தக சபையின் தலைவர் G D.கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சேவாலயம் தலைவர் வழக்கறிஞர் மயில்சாமி, செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.
காந்தி சிலைக்கு கதர் நூல் மாலையை சேவாலயம் அறக்கட்டளை உறுப்பினர் முருகேசன் வடிவமைத்திருந்தார். பொறியாளர் சங்கத் தலைவர் ரமேஷ், பட்டயத் தலைவர் மோகன் ராஜ், ராம் மோகன், அரிமா கமலக்கண்ணன் மற்றும் சேவாலய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.