வாணவராயர் விவசாய கல்லூரியில் ஒரு முன்னோட்ட விழிப்புணர்வு
ஆளுமை என்பது நாம் யார் என்பதைப் பற்றிய சொல். தனித் திறமைகள் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய அம்சம். படிப்பும் பல்வகைத் திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் தலைவர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் வேறுபடுத்துகிறது என்று கூறினார்.
மேலும் சாலை பாதுகாப்பு பற்றி முன்னாள் மாவட்ட டிராபிக் வார்டன் அரிமா கமலக்கண்ணன் பேசுகையில், சாலைகளில் நிகழும் விபத்துகளால் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்படுவதால், மனிதர்களின் இயல்பான போக்குவரத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. நமது சமூகம் பாதுகாப்பாக பயணிக்கவும் விபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் சாலை பாதுகாப்பு மிகவும் அவசியமாக உள்ளது. அந்த வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மிகவும் அவசியம். சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலை விதிகளை சரியாக கடைபிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் போக்குவரத்து நெரிசலும் வாராது என்று கூறினார்.
இதையடுத்து, முன்னாள் இராணுவ வீரர் தங்கவேல் பேசுகையில் இயற்கை விவசாயம், மலையேற்றம், கண் தானம், இரத்த தானம், உடல் தானம், ஆதிவாசிகள் நலன் பற்றி விளக்கமாக மாணவர்களிடையே உரையாடினார்.
இதையடுத்து, விழிப்புணர்வு கருத்தரங்கு முடிவில் கல்லூரி பேராசிரியர் திருமதி சங்கரி நன்றி கூறினார்.