பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பொள்ளாச்சி, அக்16., பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. ஆழியாறு அணை மூலமாக தண்ணீர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகள் விவசாய பாசனத்துக்கு பயன் பெறுகின்றன.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிளில் கடந்த மாதம் கனமழை பெய்ததால், ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது 120 அடி கொண்ட ஆழியாறு அணை, தற்போது 119.30 அடியை எட்டியுள்ளது.
இதையடுத்து, பழைய ஆயக்கட்டின் இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி 16.10.2022 இன்று ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் 15 மார்ச் 2023 ம்தேதி வரை 182 நாட்களுக்கு 1,235 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துனை பொறுத்து தேவைக்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆழியாறு அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், இரண்டாம் போகத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலமாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பகுதியில் உள்ள 6,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 16.10.2022 தேதி இன்று முதல் 15.04.2023 தேதி முடிய 182 நாட்களுக்கு நீர் இருப்பினை பொறுத்து அணையில் இருந்து 1,235 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.