திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளரின் தாயார் இயற்கை எய்தினார்
ஊடகவியலாளர், எழுத்தாளர், திராவிட இயக்கப் போராளி என பன்முகத்தன்மை கொண்ட, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் தோழர் காசு.நாகராசன்
அவர்களின் தாயார் இன்று ( 15/10/2022 ) காலை 6.45 மணியளவில் காவேரியம்மாள் இயற்கை எய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு, மிகுந்த வேதனைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன்.
அன்புத் தாயார் காவேரியம்மாள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாயார் இறப்பு என்பது தோழர் காசு.நாகராசன் அவர்கள் எத்தகைய வேதனைக்குள்ளாகி இருப்பார் என்பது தாயை இழந்த எனக்கு நன்றாக தெரியும். நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சு நடுங்குகிறது.
அன்புத் தாயாரை இழந்து வாடும் தோழர் காசு.நாகராசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
.மா.வெற்றிவேல் ஆசிரியர்
தமிழக வேங்கை வெற்றி, வெற்றி களம்