வால்பாறையில் நடைபெற்ற இளம் படை தொடக்க விழா
வால்பாறை உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இளம் படை தொடக்க விழா, ஆளுமைகளுக்கு பாராட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சி வால்பாறை வட்டாரக்கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி வட்டாரக்கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார். கணித ஆசிரியர் வசந்தகுமார் அனைவரையும் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில், மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், மையால் எழுதும் பேனாக்கள், டிஃபன் பாக்ஸ்கள், பென்சில் பெட்டிகள் வழங்கப்பட்டது. மை நிரப்பும் எழுதுகோல்களை பயன்படுத்த வேண்டும் எனவும் நெகிழிகளை பயன்படுத்துவதால் மண் மாசடையும் என்ற கருத்தினை வலியுறுத்தப்பட்டது.
பொய்லாள் ஆசிரியர் 25 ஆண்டு கால பணி முடித்தமையைப் பாராட்டி ஆசிரியர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். கொரோனா கால கட்டத்தில் திருக்குறள் எழுதி விருது பெற்ற ஶ்ரீஹரி முன்னாள் மாணவனுக்கும், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற காவ்யா என்ற மணவிக்கும் கணித ஆசிரியர் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிழச்சியில், இளம்படை நிகழ்வின் இயக்குநர் சித்ரவேல், மனித உரிமைகள் கழக தேசிய தலைவர் முகமது, வால்பாறை நகர்மன்றத் தலைவர் அழகு சுந்தர வள்ளி, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், சமூக ஆர்வலர் முகமது முபாரக், திமுக பிரமுகர் டிஸ்கோ காஜா, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பால்ராசு, கரூர் வழக்கறிஞர் ரமேஷ் பாபு, கவுன்சிலர் அன்பரசன், சத்தியவானி முத்து, முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, செல்வம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் வால்பாறை நிர்வாகிகள், மீசை குமார், கென்னடி உள்ளிட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.