கோபால்சாமி மலை நந்தகோபாலசாமி மலைக்கோவிலில் வால்பாறை எம்எல்ஏ சாமி தரிசனம்
அங்கலக்குறிச்சி கோபால்சாமி மலையில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை யான இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சாமி தரிசனம் செய்தார்.
பொள்ளாச்சி அருகே அங்குறிச்சியை அடுத்த கோபால்சாமி மலை உச்சியில் நந்தகோபாலசாமி மலைக்கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் இந்த நாட்களில் அதிக அளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் மாதம் முழுவதும் அசைவம் உட்கொள்ளாமல் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் கோபால்சாமி மலைக்கு அதிக அளவு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோவில் 1500 அடி உயரம் கொண்டதாகும் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள இக்கோவில் கரடு முரடான பாதையில் நடந்து சென்று மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையேறி பெருமாளை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சாமி தரிசனம் செய்ய பெருமாள்சாமி மலையேறி சாமி தரிசனம் செய்தார்.