பசுமைக்குரல் சார்பில் ஏ. பி. ஜெ அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடும் விதமாக, தன்னார்வ அமைப்பு பசுமைக்குரல் சார்பில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளின் தனித்திறான ஓவியம், பேச்சுப்போட்டி, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுப்போட்டிகள், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.
மேலும், "எதிர்கால போடிபாளையம்" என்ற தலைப்பில் பசுமைக்குரல் நிர்வாககுழு மற்றும் பள்ளிக் குழந்தைகள் இணைந்து பசுமை சூழல் நிறைந்த போடிபாளையம் என்ற நிலையை முன்னெடுத்து அறிவியல் திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தனர். மேலும் விழாவில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கி, இனிப்புகளும் வழங்கப்பட்டது. போடிபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு மின்விசிறிகள் வழங்கப்பட்டது.
நிழச்சியில், போடிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் R.ராஜா மற்றும் பசுமைக்குரல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.