வேட்டைக்காரன் புதூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
வேட்டைக்காரன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் பற்றி விழிப்புணர்வும் அதனால் ஏற்படும் தீமைகளும் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
வேட்டைக்காரன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆனைமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், போதைப் பொருள்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.
போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என மாணவர்கள் உறுதி அளித்தனர்
இதில், ஆனைமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகவேல், சதானந்தம், ஜோதிமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.