பெரியபோது அரசு பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரியபோது அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
பொள்ளாச்சி அருகே பெரியபோது அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் மருத்துவர் ரம்யா தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் மருத்துவர் ரம்யா பேசியதாவது:- மாணவர்களுக்கு புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றிய நலக்கல்வி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.