Type Here to Get Search Results !

வால்பாறை பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வேண்டும்: தமிழக அரசிடம் எம்பி.சண்முகசுந்தரம் கோரிக்கை

Top Post Ad

வால்பாறை பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வேண்டும்: தமிழக அரசிடம் எம்பி.சண்முகசுந்தரம் கோரிக்கை  



வால்பாறையிலும் மகளிருகளுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பேருந்து பயண சீட்டு வேண்டும் என பொள்ளாச்சி எம்பி.சண்முகசுந்தரம் தமிழக அரசிடம் கோரிக்கை.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்து கழங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையான ரூ.1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என தெரிவிக்கப்பட்டது.


இந்த திட்டம் மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்திற்காக நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்த பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில் பேருந்துகளின் முன்பகுதியில் ‘மகளிர் பயணம் கட்டணம் இல்லை’ என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டது. 



இந்நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தினசரி மேற்கொள்ளப்படும் பயணிகளில் 62.34 சதவீதம். அதாவது, ஓராண்டில் 131.31 கோடி பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நாள்தோறும் கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை சராசரியாக 37.41 லட்சம் ஆகும். இதற்காக நாளொன்றுக்கு கட்டணத்தொகை ரூ.5.98 கோடியாகும். 


இந்தநிலையில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளிட்ட அறிக்கையில், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட

வால்பாறையில் வசிக்கும் 80 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்களாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவராகவும் உள்ளார்கள்.


தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முதன்மை திட்டத்தை வால்பாறை பகுதியில் வசிக்கும் மகளிரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்திடுமாறு,  தமிழக முதல்வரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் பரிந்துரை செய்து திட்டத்தை செயல்படுத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.