தருமபுரி மாவட்ட தோழி கூட்டமைப்பு சார்பில், பெண் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
தருமபுரி மாவட்ட தோழி கூட்டமைப்பு சார்பில் கடத்தூர் ஒன்றியம் கசியம்பட்டி சி.ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் பெண் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தோழி கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் சரவணன் நோக்க பற்றி விரிவாக பேசினார். இதில், தோழி கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் Icc பயிற்சி and women observatory மாநில அளவிலான செயல்பாடுகள் அறிமுகபடுத்தப்பட்டது.
பணித் தளங்களில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்கல் மற்றும் பள்ளிகளில் ICC ( internal complaince commitee ) அமைத்திடவும், அதனை கண்காணிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான நலவாழ்வு கூர்நோக்க பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்குழு மாவட்டத்தில் நடக்கும் நலவாழ்வு பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிந்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பது மற்றும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தோழி கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தொடர் முயற்சிகளுக்கு தோழி கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பயிற்சியில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் 40 பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தீபம் தொண்டு நிறுவன இயக்குனர் கற்பகவல்லி, சி.ஆர்.டி.எஸ் நிறுவன தலைவர் சிவக்குமார், விப்ரோ தொண்டு நிறுவன இயக்குனர் வெங்கடேசன், சிற்பி தொண்டு நிறுவன இயக்குனர் கமலக்கண்ணன், திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் வேல்விழி, சேவா தொண்டு நிறுவன இயக்குனர் துரை மணி, SMD தொண்டு நிறுவன இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.