APJ. அப்துல்கலாம் பிறந்த நாள் விழா: மாணவ,மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி
பொள்ளாச்சியை அருகே போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் APJ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில், பொள்ளாச்சி வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் சர்மிளா தலைமையில், தேசியகொடி ஏற்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தலைமை ஆசிரியை அம்சவேணி முன்னிலை வகித்தார்.
விழாவில், தன்னார்வ அமைப்பு பசுமைக்குரல் சார்பில் மாணவ,மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வட்டாரக்கல்வி அலுவலர் சியாமளா பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பசுமைக்குரல் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.