Type Here to Get Search Results !

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - பள்ளிக்கல்வித்துறை



ஆகஸ்ட் 01.,

கொரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்து, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது இறப்புகள் அதிக அளவில் இருந்தது. அப்பொழுது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இறந்ததால் குழந்தைகள் கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மூலம் கல்வி கட்டணங்களை செலுத்தும் என அறிவித்திருந்தது.


இந்தநிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டணம் வசூல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றால் இறந்த மாணவர்கள் கல்வி கட்டணம் அரசே ஏற்கும் அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பயின்றுவரும் அந்த தனியார் பள்ளியிலேயே பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து, அந்த மாணவர்களின் விவரங்களை பெறும் கல்வித்துறை, அந்த மாணவர்களின் பள்ளியின் கல்வி கட்டணத்தை அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா தொற்று காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தாங்கள் படிக்கிற தனியார் பள்ளிகளிலேயே கல்வி படிக்கிற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies