பிரேசில் நாட்டில் முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு! குரங்கு அம்மை என்பது என்ன?
ஜூலை 30.,
பிரேசில் நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
சர்வதேச அளவில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கட்டிப்பிடித்தல், முத்தங்கள், மசாஜ்கள் அல்லது உடலுறவு மூலம் குரங்கு அம்மை பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் பிற பொருட்களான ஆடை மற்றும் துண்டுகள் மூலமும் பரவுகிறது.
இதனால், குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டின் தென்கிழக்கு மினாஸ் ஜெராசிஸ் மாநிலத்தின் தலைநகரான பெலோ ஹாரிஜோண்டியில் உள்ள பொது மருத்துவமனையில் 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இவர் புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுவரை, மினாஸ் ஜெராஸில் 44 பேருக்கு குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 130 பேர் பரிசோதனையில் உள்ளனர். பிரேசிலில், புதன்கிழமை (ஜூலை 27) நிலவரப்படி 978 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கு அம்மை என்பது என்ன?
குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால், லேசான பாதிப்புகளே ஏற்படும் எனவும், இதனால், பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் என்றும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் ஒருவரொருக்கொருவர் எளிதில் பரவாது, இதனால் பரவலாக பாதிக்கப்படும் ஆபத்து மிகவும் குறைவானது.
இந்தியாவில் இதுவரை நான்கு பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
குரங்கு அம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கு அம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கு அம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.
குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?
குரங்கு அம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது, மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
குரங்கு அம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கு அம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கு அம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.
மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கு அம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.
ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்ற அறிகுறிகள் தென்படும். அதன்பின் காய்ச்சல் வந்ததும் தடிப்புகள் ஏற்படுகிறது. குரங்கு அம்மை பாதிப்பு என்பது முதலில் முகத்தில் தோன்றி, பிறகு உடலின் பிற பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களுக்கு பரவுகிறது.
அரிப்பு அதிகமாகி அது வலி மிகுந்ததாகிவிடும். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.
பொதுவாக இந்தத் தொற்று 14 முதல் 21 நாட்களில் தானாக சரியாகி விடும். இருப்பினும் சில நேரங்களில், இந்த தொற்று தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இந்த தொற்று மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

.jpg)