சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் மழைபொழிவு காரணமாக வெங்காய விலை சட்டென்று உயர்ந்தது. கொரோனா வைரஸ் நோய் தோற்றால் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், வரத்து குறைந்ததால் வெங்காய விலை தங்கம் ரேஞ்சுக்கு விற்பனையானது.
இந்தநிலையில், கொரோனா பொதுமுடக்கத்துடன் சேர்ந்து வடமாநிலங்களில் மழை பொழிவும் அதிகமானதாலும், வெங்காய பதுக்கலும் நிறைவாக நடந்தது. இதையடுத்து, மீண்டும் பொதுமுடக்க தளர்வுகளின் அடிப்படையில் விலை கட்டுக்குள் வந்தது.
இதையடுத்து, கோவையில் சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.170க்கும், அதேபோல், திருச்சியில் ஒரு கிலோ ரூ.120க்கும், திண்டுக்கல்லில் ஒரு கிலோ ரூ.145க்கும், கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.130க்கும் சின்ன வெங்காயம் விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மழைபொழிவு அதிகமாக இருந்ததால் வெங்காயங்கள் அழுகியதன் காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், சின்னவெங்காயம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது, பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-60வரை விற்கப்படும் நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


