2 வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் #ChiefMinisterM_K_Stalin #TamilNadu_Government
ஆகஸ்ட் 04.,
சென்னை: 2 வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் திருப்போரூர், சின்ன சேலத்தில் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை இன்று காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.2.11 கோடி ரூபாய் செலவில் திருப்போரூர் மற்றும் சின்ன சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் ரூ. 1.11 கோடி ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் ரூ. 1 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ. 30.73 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் கட்டிங்களை திறந்து வைத்தார்.
அதுபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், மேம்பட்ட நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் குறைக்கவும், மின் ஆளுமை (e-Governance) திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவும், விலை மதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்களை பாதுகாக்கவும், ஓய்வூதியர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் (Drawing & Disbursing Officers) பட்டியல்களை துரிதமாக ஏற்பளிக்கவும், போதிய இடவசதியின்றி வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் கருவூல அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசால் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், பொது மக்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் விரைவாக சேவை வழங்க வழிவகை ஏற்படும். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 4305 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 11 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் 2680 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும், கட்டப்பட்டுள்ள இரண்டு கருவூல அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., கருவூல கணக்குத்துறை ஆணையர் க.விஜயேந்திரபாண்டியன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதில் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்களுக்கு தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, மற்றும் அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மேலும் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும், இந்தத் துறை விளங்கி வருகிறது. இந்தத் துறையின், பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, சென்னை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், 2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் 4 கோடியே 25 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், கல்வராயன்மலையில் 4 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 2 கோடியே 75 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில், ஏரலில் 3 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் 2 கோடியே 79 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்; என மொத்தம் 30 கோடியே 73 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ..ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.