ஆதார் துறையில் (UIDAI) பணி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! - ஒரு லட்சம் வரை சம்பளம்!
ஜூலை 27.,
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஜெனரல் பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அதனை நிரப்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள, தகுதி உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு :
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டைகள் வடிவில் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அரசு நிறுவனம் ஆகும். மேலும், "UIDAI" ஆனது ஆதார் சட்டம்,, 2016-இன் விதிகளின் கீழ் நிறுவப்பட்டது. இதையடுத்து,, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஜெனரல் (தொழில்நுட்பம்) ஆகிய பணி இடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளம் – www.uidai.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரங்கள் :
மொத்தம் 5 பணியிடங்கள் உள்ளன.
பணியின் பெயர் : இயக்குநர் ( 3 காலியிடங்கள்),
பணியின் பெயர் : உதவி இயக்குநர் ஜெனரல் ( தொழில் நுட்பம் ) ( 1 காலியிடம் ),
பணியின் பெயர் : இயக்குநர் (தொழில் நுட்பம்) (1 காலியிடம் ).
விண்ணப்பதாரர் கல்வி தகுதி :
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை பற்றி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
மாத ஊதியம் :
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு LEVEL -13 வரை சம்பளம் வழங்கப்படும்.
UIDAI ஆட்கள் சேர்ப்பு 2022 விண்ணப்பிப்பது எப்படி:
விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு ஆகஸ்ட் 16, 2022-க்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளம் – www.uidai.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் www.deputation@uidai.net.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பத்தை அனுப்பலாம். அல்லது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை தெளிவாக படித்த பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.
மேலும், படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தவறில்லாமல் நிரப்பவும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் (Educational Qualification,, ID proof, , , Resume,,Recent Photograph, if any Experience etc) அனைத்தும் அனுப்ப வேண்டும்.
அனைத்து தகவல்களையும் பதிவிட்ட பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும். இதையடுத்து, விண்ணப்பத்தினை "இயக்குனர் (HR), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), பங்களா சாஹிப் சாலை, , காளி மந்திர் பின்புறம், ,கோல் மார்க்கெட், புது தில்லி-110 001.″ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

.jpg)