Type Here to Get Search Results !

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலை: ரூ. 44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம்... Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலை:  ரூ. 44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியம்...  Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!



ஜூலை 27.,


கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்ட அறிகையில் Consultant 

Administration மற்றும் Chief Accounts Officer காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.


கலாக்ஷேத்ரா அறக்கட்டளை காலிப்பணியிடங்கள் :


கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் Consultant (Administration) மற்றும் Chief Accounts Officer பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.


Kalakshetra Foundation கல்வி தகுதி :


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக் கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.


Kalakshetra Foundation அனுபவம் :


அறக்கட்டளையில் Consultant ( Administration ) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரி / பல்கலைக் கழகங்களில் Administration அல்லது Establishment துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.


மேலும், அறக்கட்டளையில் Chief Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களில் Indian Audit and Accounts Department அல்லது ICAD துறைகளில் Officer பதவியில் Scale of pay of Rs. 9,300 - 34,800 GP 4,200 என்ற சம்பள அளவின்படி குறைந்தது 5 ஆண்டுகள் மாத ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.


Kalakshetra Foundation வயது வரம்பு:


அறக்கட்டளையில் Consultant (Administration) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.


அறக்கட்டளையில் Chief Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.


Kalakshetra Foundation ஊதியம்:


அறக்கட்டளையில் Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 30,000 மாத சம்பளமாக பெறுவார்கள்.


Chief Accounts Officer பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.


கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தேர்வு முறை:


அறக்கட்டளையில் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


கலாக்ஷேத்ரா அறக்கட்டளை விண்ணப்பிக்கும் முறை: 


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி, திறமை உள்ளவர்கள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபாலில்  அனுப்பவேண்டும்.


இறுதி நாட்கள்:

Consultant (Administration) – 16.08.2022

Chief Accounts Officer – 22.08.2022


Download Notification & Application Link 1


Download Notification & Application Link 2

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies