Type Here to Get Search Results !

TNPSC புதிய வேலைவாய்ப்பு: ரூ.36,200 முதல் ரூ.1,33,100 வரையிலான மாத சம்பளம்

TNPSC புதிய வேலைவாய்ப்பு: ரூ.36,200 முதல் ரூ.1,33,100 வரையிலான மாத சம்பளம் 



ஜூலை 28.,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப்பணி மற்றும் சமூக அலுவலர் உள்ளிட்ட மருத்துவக் கல்வித்துறையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு  ஆணையம் வெளியிட்டுள்ளது. 


மேலே, குறிப்பிட்டுள்ள  அரசு பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் மட்டுமே 26 - 08 - 2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


எனவே, ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என்று அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


TNPSC VOC & CO காலிப்பணியிடங்கள் :


Vocational Counsellor – 05 பணியிடங்கள்

Community Officer – 11 பணியிடங்கள்


VOC & CO வயது வரம்பு :


01-07-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


TNPSC Vocational Counsellor கல்வி தகுதி :


அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து மருத்துவம் மற்றும் மனநல சமூகப்பணியை சிறப்புப் பாடமாகக் கொண்டு சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் விண்ணப்பதார்கள் பெற்றிருக்க வேண்டும்.


TNPSC Community Officer கல்வி தகுதி :


அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் விண்ணப்பதார்கள் பெற்றிருக்கவேண்டும், சமூக நலத்துறையில் அரசாங்கத்தின் ஏதேனும் ஒரு துறை அல்லது பதிவு செய்யப்பட்ட அரசு சாரா நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.


சம்பள விவரம் :


Vocational Counsellor – ரூ.36,200 – 1,33,100/-

Community Officer – ரூ.35,600 – 1,30,800/-


TNPSC விண்ணப்ப கட்டணம்:

பதிவு கட்டணம் – ரூ.150/-

தேர்வுக் கட்டணம் – ரூ.100/-


தேர்வு செயல் முறை :


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் CBT தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர்கள். CBT தேர்வானது 12-11- 2022 முதல் 13-11- 2022 வரை நடைபெற உள்ளது.


VOC & CO பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :


இந்தப் பணிக்கு தகுதியும், திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28- 07- 2022 முதல் 26- 08- 2022 வரை விண்ணப்பிக்கலாம்.


Download Notification 2022 Pdf

Apply Online

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies