அரசு சார்பில் ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் டாக்சி சேவை
ஜூலை 28.,
நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மட்டுமே, "ஆன்லைன் டாக்சி" சேவைகள் இயங்கி வருகின்றன. இதையடுத்து, முதன் முறையாக மாநில அரசு சார்பில் இ-டாக்சி சேவைகளை தொடங்க உள்ளது.
டாக்சி சேவை :
நாடு முழுவதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட அனைத்து தனியார் கால் டாக்சி நிறுவனங்களும், குறைவான விலையில் நிறைவான ஆன்லைன் டாக்சி சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இதுவரைக்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மட்டுமே, ஆன்லைன் டாக்சி சேவைகள் இயங்கி வருகிறது. இதையடுத்து, முதன் முறையாக நாட்டிலேயே கேரளா மாநிலத்தில்தான், ஆன்லைன் டாக்சி சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது, "கேரள சவாரி" என்கிற பெயரிலேயே ஆன்லைன் டாக்சி சேவைகளை தொடங்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவிலேயே மாநில அரசு ஆன்லைன் மூலமாக டாக்சி சேவைகளை தொடங்கியது என்பது இதுவே முதல் முறையாகும். அதாவது, கொண்டுவரவுள்ள "கேரளா சவாரி" என்ற 'ஆன்லைன் டாக்சி' சேவைகளை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் அமல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு, எந்தவித இடையூறும் இல்லாத வகையில், சர்ச்சைகளற்ற பயணத்திற்காகதான் இத்தகைய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரள அரசின் ஆன்லைன் டாக்சி முன்னோடி திட்டமானது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரஉள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில கல்வி மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் சிவன்குட்டி, இந்த "கேரளா சவாரி" என்ற 'ஆன்லைன் டாக்சி' சேவைகளை மாநில அரசே ஏற்று நடத்துவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி தொழிலார்களுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், "கேரளா சவாரி" டாக்சி சேவைகள் மூலமாக பொதுமக்கள் அனைவரும் பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)