இந்திய ராணுவத்தில் வேலை: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 28.,
Indian Army யில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், காலியாக உள்ள Agniveer பணிக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துக்கள்.
Indian Army காலிப்பணியிடங்கள் :
இந்திய ராணுவத்தின் அறிவிப்பின்படி Agniveer பணிக்கென்று பல்வேறு காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Army கல்வி தகுதி :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Agniveer வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 17 1/2 எனவும் அதிகபட்ச வயதனது 21 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பற்றி வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Army ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், ஆண்டின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு – ரூ.30,000
இரண்டாம் ஆண்டு – ரூ.33,000
மூன்றாம் ஆண்டு – ரூ.36,000
நான்காம் ஆண்டு – ரூ.40,000
Agniveer தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Physical Measurement Test (PMT), Physical Fitness Test (PFT), Medical Test மற்றும் Common Entrance Examination (CEE) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30- 07- 2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)