விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் !
ஜூலை 28.,
தமிழகத்தில் இலவச மின் இணைப்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிலையில், மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், செப்டம்பர் மாதம் இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இலவச மின் இணைப்பு :
நமது நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, தொழில் நுட்ப வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இதனால், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கும் கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. அந்த வகையில், மின்சாரம் என்பது எல்லா தேவைகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மின்சாரம் இல்லை என்றால் நாட்டில் எந்தவொரு செயல்பாடுகளும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் மக்களின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், வளர்ந்து வரும் தொழில் நுட்பம் இவை அனைத்தும் மின்சாரத்தின் தேவையை இன்னும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின் தேவைகளை அறிந்து, தமிழக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர்கள், மின் கட்டணத்தில் மாற்றம் போன்ற திட்டங்களை அறிவிக்கப்பட்டது. மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரா இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வாங்கப்பட உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், திருவாரூரில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

.jpg)