Type Here to Get Search Results !

KVB கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு: ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

KVB கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு:  ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!



ஜூலை 28.,


இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் துறையான வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. மேலும், வங்கி பணி இடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே முழு விவரங்களையும் அறிந்து, தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


கரூர் வைஸ்யா வங்கியின் காலிப் பணியிடங்கள் :


விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.


KVB கல்வி தகுதி :


விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து, சுமார்  60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.



வயது வரம்பு :


26 வயதுக்கு கீழ் உள்ள ஆண், பெண் இருபாலரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செயல்முறை :


விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


நேர்காணல் பற்றிய விவரங்கள் :


29.07.2022 அன்று காலை 10 மணிக்கு CSC Computer Education Opp. Collector Office, 2nd Floor, Union Bank Upstairs, Villupuram மற்றும் Global Institute of Engineering & Technology 251/1, Bangalore – Chennai Highway, Melvisharam, Vellore ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies