இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை: 39 பணியிடங்கள்... 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!
ஜூலை 28.,
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( IOCL ) நிறுவனம் தற்போது வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காலியாக உள்ள Junior Operator (Aviation) Grade I காலிப் பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு ஆர்வமுள்ள தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டு
உள்ளது. இந்தப் பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
IOCL காலிப்பணியிடங்கள் :
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ( IOCL ) நிறுவனம் அறிவித்த அறிவிப்பின்படி Junior Operator (Aviation) Grade I பணிக்கென்று மொத்தம் 39 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Operator (Aviation) Grade I – Telangana – 5 பணியிடங்களும்,
Junior Operator (Aviation) Grade I – Karnataka – 6 பணியிடங்களும்,
Junior Operator (Aviation) Grade I – Tamilnadu, Puducherry – 28 பணியிடங்களும் என மொத்தம் 39 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IOCL கல்வி தகுதி :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
IOCL வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 எனவும், அதிகபட்ச வயது 26 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IOCL ஊதிய விவரம் :
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000 முதல் ரூ.78,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IOCL தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill / Proficiency / Physical Test ( Driving Test ) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம் :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29- 07- 2022ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)