வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் செய்யும் துரோகம்
-மதிமுக தொழிற்சங்க தலைவர் கல்யாணி கடும் கண்டனம்
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையில், தொழிலாளி ஒருவருக்கு 600/- ரூபாய், சூப்பர்வைசர்களுக்கு 900/- ரூபாய் பிடித்தம் செய்ய ஐந்து தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை, மதிமுக தொழிற்சங்க தலைவர் கல்யாணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையில், தொழிலாளி ஒருவருக்கு 600/- ரூபாய், சூப்பர்வைசர்களுக்கு 900/- ரூபாய் பிடித்தம் செய்வதை நிறுத்தகோரி, தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகத்தில் மதிமுக தொழிற்சங்க தலைவர் கல்யாணி தலைமையில் நேற்று முன்தினம் தனியாக மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இந்த வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள, மதிமுக தொழிற்சங்கம் எம் எல் எப், ஐ என் டி சி, பிரபாகரன், தீரன் தொழிற்சங்கம், பி எம் எஸ்,, சாமிதாஸ் உள்ளிட்ட சங்கங்கள் இன்று மனு அளித்தனர்.

.jpg)