துரோக ஒப்பந்தத்தம் செய்யும் தொழிற்சங்க தலைவர்களுக்கு வால்பாறை MLA டி.கே.அமுல் கந்தசாமி கடும் கண்டனம்
ஜூலை 27.,
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையில், தொழிலாளி ஒருவருக்கு 600/- ரூபாய், சூப்பர்வைசர்களுக்கு 900/- ரூபாய் பிடித்தம் செய்ய ஐந்து தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையில், தொழிலாளி ஒருவருக்கு 600/- ரூபாய், சூப்பர்வைசர்களுக்கு 900/- ரூபாய் பிடித்தம் செய்ய ஐந்து தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம்.
அதன்படி, தொழிற்சங்கங்கள் கொடுக்கும் படிவங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யாரும் கையெழுத்து போடவேண்டாம். சம்பளப் பேச்சுவார்த்தை வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் முழுமையான சம்பளத்தை பெற்றுத் தருவதற்கு பாடுபடுவேன். மேலும், நான் சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிச்சயமாக பெற்றுத் தருவேன்.
எனவே, தொழிற்சங்கங்களை நம்பி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் யாரும் அந்த படிவத்தில் கையெழுத்து போட வேண்டாம் என அனைவரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் என வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார். அப்போது, நகரச் செயலாளர் மயில் கணேசன், நகர துணைச் செயலாளர் பெண் கணேசன், நகர ஐடிஐ செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பெருமாள், செல் கணேஷ், எஸ்.கே.எஸ் பாலு, இஞ்சிபாறை சீனி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

.jpg)