ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படுமா ? மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!
ஜூலை 27.,
நாடு முழுவதும் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயங்கி வரும், ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது, ரேஷன் அட்டைகளுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள்:
அரசின் பல நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே பொது மக்களுக்கு சென்று அடைகிறது. ஆனால், தகுதிவாய்ந்த பலருக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று அடைவதில்லை என்று புகார் வந்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயங்கிவரும், ரேஷன் கடைகள் மூலமாக, உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தப் பொருள்களை ஒருசில சமூக விரோதிகள், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக குற்றங்கள் வந்தவண்ணம் இருக்கிறது. அதனால், உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசின் இந்த சலுகைகள் கிடைப்பதில்லை. தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ரேஷன் கார்டுகளை பின்பற்றி வரும் விதிமுறைகளை மாற்றி தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல், புக்கா வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள், ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல், தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கும் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள், ஆகியோர் தங்களது ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி செய்யாவிட்டால் அரசே ரேஷன் கார்டை ரத்து செய்துவிடும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசு வெளியிடவில்லை. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இந்த விதிமுறைகள் படிப்படியாக வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ, மத்திய அரசோ இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், இந்த விதிமுறைகள் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

.jpg)