அரசு பள்ளி ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை -ஆசிரியர்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அண்மையில் பள்ளி கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்பால் "எமிஸ்" தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.
வருகைப்பதி செய்வதில் சிக்கல்:
தமிழ்நாட்டில் 2022 - 2023 கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான நல்லுறவு மேம்படுத்தல் போன்ற பல திட்டங்களை அரசு வெளியிட்டது.
மேலும், அரசு பள்ளி மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என்று ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் முழுத் திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள், பள்ளி வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இதில் இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம்,போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் கலைத் திருவிழாக்களும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
![]() |
| TN Schools Attendance App |
இந்நிலையில், எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்றும், பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறையால் எச்சரிக்கப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும், பள்ளிக்கு மொபைல் போன் கட்டாயம் எடுத்து வருமாறு, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதாவது, "எமிஸ்" என்ற பள்ளிக் கல்வித்துறையின் மொபைல் போன் செயலியில், மாணவர்களின் தினசரி வருகைப்பதிவை, தினமும் வகுப்பறையில் இருந்தபடி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று, பள்ளி ஆசிரியர்களின் வருகையையும், தலைமை ஆசிரியர்கள் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்வதற்கு, ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருப்பது, முரண்பாடாக உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

.jpg)


