தீபம் தொண்டு நிறுவனத்திற்கு விருது: மூன்றாவது இடத்தை பிடித்தது தீபம் தொண்டு நிறுவனம்
தருமபுரி ஜூலை 26.,
பெங்களூரில் இயங்கி வரும் "தொணி பவுண்டேஷன்" தமிழ்நாட்டில் மற்றும் மற்ற மாநிலங்களில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, தொண்டு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக 18 மாத காலம், பயிற்சி அளித்து வந்தது. இந்த பயிற்சியினை எட்டு திட்டங்களாக பிரித்து 161 அளவுருக்கள் மூலம் செயல்படுத்தி வந்தது. தொணி பவுண்டேசன் நிறுவனத்தின் நிரந்தரா திட்டம் மூலம் (32) முப்பத்தி இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு நடத்தப்பட்டது.
தொணி பவுண்டேசன் நிறுவனத்தின் இறுதி மதிப்பீட்டில் தமிழகத்தைச் சேர்ந்த தருமபுரி மாவட்டம் அரூரில் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான தீபம் தொண்டு நிறுவனம், 99.23 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
"தொணி பவுண்டேசன்" நிறுவனத்தின் நிரந்தரா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட முப்பத்தி இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இறுதி மதிப்பீட்டில், பாண்டிசேரியை சேர்ந்த "ஶ்ரீஸ்டி பவுண்டேசன்", மற்றும் "சத்யா ஸ்பெஷல் ஸ்கூல்" முதல் இடத்தையும், கன்னியாகுமாரியைச் சேர்ந்த "சாந்தி நிலையம்" இரண்டாம் இடத்தையும், தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த தீபம் தொண்டு நிறுவனம் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா பெங்களூர் ஒய்.எம்.சி.ஏ., மகாலில் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு மிஸ்டர் "சிபுலால் இன்ஃபோசிஸ்", திருமதி "மஞ்சு குச்சல்" தொணி பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
மூன்றாம் இடத்தையும் பிடித்து விருது மற்றும் சான்றிதழை பெற்றுக்கொண்ட தீபம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திருமதி கற்பகவல்லி பேசும்போது; முறையான வழி நடத்தலும் பயிற்சியும் அளித்த தொணி பவுண்டேசன் நிறுவனத்திற்கு நன்றி. இந்த திட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தீபம் தொண்டு நிறுவனம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த விருதினை பெற கடின உழைப்போடு பணியாற்றிய திரு.வெற்றிவேல் CFM, திருமதி.முத்துலட்சுமி FRM, திருமதி.ஜனனி PM மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.